supreme court : மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க தடை

தில்லி: Mekedatu Dam Issue : மேக்கேதாட்டு அணை குறித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மேக்கேதாட்டு அணை குறித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் (Cauvery Water Management Authority) விவாதிக்க கூடாது என தெரிவித்து. தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தியது. வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஆணையக்கூட்டத்தில் மேக்கேதாட்டு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

ஏற்கெனவே கர்நாடகம் தாக்கல் செய்த மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்புமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு வலியுறுத்தியது.

மேலும், மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி கோரும் எந்தவொரு விண்ணப்பத்தையும் சுற்றுச்சூழல் (Ministry of Environment) அமைச்சகம் மற்றும் அதன் ஏஜென்சிகள் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.