Bagina Pooja : கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு பாகினா பூஜை செய்தார் முதல்வர் பசவராஜ் பொம்மை

மண்டியா : Bagina Pooja in krs, kabini dams : கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை பாகினா பூஜை செய்தார்.

காவிரி நீர்ப்பிடிப்புபகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடகு மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருவதாக் பாகமண்டலா, சோம்வார்பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு காணப்படுகிறது.

அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். இந்த அணை முழு கொள்ளவை திங்கள்கிழமை மாலை எட்டியது. அதேபோல எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையும் தனது முழு கொள்ளளவை கடல் மட்டத்திற்கான 2284 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை முதலில் கபினி அணைக்குச் சென்ற தனது மனைவியுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை, அணையில் பாகினா பூஜை செய்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ண சாகர் (Bagina Pooja in krs) அணைக்கு சென்ற முதல்வர் பசவராஜ் பொம்மை, அணையில் பாகினா பூஜை செய்து வழிப்பட்டார். பூஜையின் போது அவருடன் அமைச்சர்கள் கோவிந்த கார்ஜோள், எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக தனது மனைவியுடன் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்ற முதல்வர் பசவராஜ் பொம்மை, சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு அக்கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினர்.