Pakistan Former Prime Minister Imran Khan : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சம்

இஸ்லாமாபாத்: fears that he may be arrested : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தான் கைது செய்யப்படலாம் என்று அச்சத்தை எதிர்கொண்டுள்ளார்.(Imran Khan Faces Arrest). இதனால் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI ) தலைவர்கள் தங்களின் கட்சி தொண்டர்களை போராட்டங்களுக்கு அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இஸ்லாமாபாத் சதார் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் அலி ஜாவேத் (Magistrate Ali Javed), நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இம்ரான்கான் மிரட்டியதாக புகார் அளித்தார். இதனால், இம்ரான் கான் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அரசு நிறுவனங்களுக்கு எதிராக இம்ரான் கான் மிரட்டல் மற்றும் ஆவேசப் பேச்சு நடத்தினார். இதற்கிடையில், கடந்த வாரம் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது உதவியாளர் ஷாபாஸ் கில் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், பெண் நீதிபதி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.

இது போன்ற அறிக்கைகளை வெளியிட்ட பிறகு, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (PEMRA) பாகிஸ்தானில் இம்ரான் கானின் உரைகளை நேரடியாக ஒளிபரப்ப தடை விதித்தது. இம்ரான் கான் தனது உரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பாகிஸ்தான் நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார் எம்றி பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்கு முறை ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மூலம் வெறுப்பூட்டும் பேச்சு கவனிக்கப்பட்டதாகக் கூறியது. இதனால் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்படுவதற்கு முன்பே இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் பெறுவதற்கான‌ ஏற்பாடுகள் (Arrangements are being made to get bail) செய்யப்பட்டு வருகின்ற‌ன. மேலும், இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிடிஐ கட்சியின் தொண்டர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எங்கள் தலைவர் ஆபத்தில் இருக்கிறார், தெருவில் இறங்கி போராட்டம் நடத்த அழைத்துள்ளார். இது பாகிஸ்தானை மற்றொரு அரசியல் குழப்பத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை என்றுஅந்நாட்டின் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.