Nominations open for various National Awards: பல்வேறு தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுடெல்லி: Nominations open for various National Awards: தேசிய விருதுகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இணையப்பக்கத்தில் பல்வேறு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளிப்படை தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக ஒரே தளத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகளின் அனைத்து விருதுகளையும் ஒருங்கிணைத்து கொண்டு வர பொதுவாக தேசிய விருது இணையப்பக்கம் https://awards.gov.in மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விருதுகளுக்கு தனிநபர்களை அல்லது நிறுவனங்களை பரிந்துரை செய்யும் குடிமக்கள் அல்லது அமைப்புகளுக்கு இந்த இணையப்பக்கம் வசதி செய்கிறது.

தற்போது பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

விருது மற்றும் கடைசி தேதி விபரம்:

பத்ம விருதுகள் – கடைசி தேதி 15.09.2022
வன வளத்தில் சிறப்பாக செயல்பட்டோருக்கான தேசிய விருது 2022- கடைசி தேதி 30.09.2022
தேசிய கோபால் ரத்னா விருது 2022 – கடைசி தேதி 15.09.2022
தேசிய தண்ணீர் விருதுகள் 2022- கடைசி தேதி 15.09.2022
மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது 2022- கடைசி தேதி 29.08.2022
தனிநபர் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2021- கடைசி தேதி 28.08.2022
தனிநபர் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2022- கடைசி தேதி 28.08.2022
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருது 2021 – கடைசி தேதி 28.08.2022
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருது 2022 – கடைசி தேதி 28.08.2022
தேசிய சிஎஸ்ஆர் விருதுகள் 2022- கடைசி தேதி 31.08.2022
நாரி சக்தி விருது 2023- கடைசி தேதி 31.10.2022
சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது 2023- கடைசி தேதி 31.08.2022
மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறையில் சிறந்த சேவைக்கான தேசிய விருது 2022 – கடைசி தேதி 29.08.2022
ஜீவன் ரக்ஷா பதக்கம் – கடைசி தேதி 30.09.2022
மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பம் செய்வதற்கும் https://awards.gov.in என்ற தேசிய விருதுகள் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.