Chief Minister Basavaraj bommai : குருலிங்கசாமியின் அகால மரணம் பத்திரிகை துறைக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் இழப்பு: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு : Gurulinga Swamy untimely death is a loss to journalism industry and me personally : கர்நாடக முதல்வரின் செய்தி தொடர்பாளர் எச். பி. குருலிங்கசாமியின் மரணம் அகால மரணம் பத்திரிகைத் துறைக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரும் இழப்பாகும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடக முதல்வரின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்த‌ குருலிங்கசாமி (Gurulinga Swamy) திங்கள்கிழமை காலை உடற்பயிற்சியின் போது, இதயவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் அவரது இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: குருலிங்கசுவாமி எனது இளமைக்கால நண்பர், அவரின் அகால மரணம் என்னை திகைக்க வைத்ததுள்ளது. எனக்கு அவரை 20 ஆண்டுகளாகத் தெரியும். அவர் ராமதுர்கா (Ramadurga village) கிராமத்தில் ஒரு உயர்ந்த‌ குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் சொந்த முயற்சியால், கர்நாடகா பல்கலைக் கழகத்தில் இதழியல் படித்து, ஊடகத்துறையில் பணியாற்றினார், அவர் பத்திரிகை அரங்கில் இருந்தபோது எனக்கு தெரிந்தவர். அச்சு மற்றும் எலக்ட்ரானிக் துறையில் பணியாற்றிய அவர், மிகவும் சுறுசுறுப்பான பத்திரிகையாளர், பொறுப்பான பத்திரிகையாளர், அவர் தனது அறிக்கையின் துல்லியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவரது செயல்பாடு மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தது என்றார்.

மனிதநேயத்திற்கான பத்திரிகையாளர்:

சமூகப் பொறுப்புள்ள பத்திரிக்கையாளரான (socially responsible journalist) அவர், சமூகத்திற்கு நல்லது செய்தவர். குருலிங்கசுவாமி, தனித்து வளராமல், தன்னுடன் நட்புறவை வளர்த்து, பிறருக்கு எப்போதும் உதவினார். அவரது முயற்சியால் நாள்தோறும் 2 அல்லது 3 பேருக்கு முதல்வ‌ரின் நிவாரண நிதியில் இருந்து உதவி வழங்கப்பட்டது. ம‌னிதாபிமானத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். குருலிங்கசாமியின் மறைவு பத்திரிக்கை துறைக்கும், எனக்கு தனிப்பட்ட முறையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

குருலிங்கசாமியின் மறைவின் துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் அளித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும் என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை. பேட்டியின் போது அவருடன் அமைச்சர் முனிரத்னா (Minister Muniratna) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.