Private Job Fair: சேலத்தில் வரும் 26ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம்: Private Sector Employment Camp coming up in Salem on 26th: சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுக்கொண்டிருந்த சிறு அளவிலான தானியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Micro Level Private Job Fair) இனிவரும் மாதங்களின் இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெற உள்ளது.

இதன்படி வருகின்ற வெள்ளிக்கிழமை 26.08.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் ஜவுளி வங்கி சேவைகள், காப்பீடு மருத்துவம். கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தில் பங்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்குப் பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.

சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு jobfairmccsalem@gmailcom என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையணம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.