WhatsApp, Instagram, Facebook : வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் நிறுவனங்களிலிருந்து 11,000 பணியாளர்கள் நீக்கம்: மார்க் ஸக்கர்பர்க் முடிவு

Image credit: Twitter.

நியூயார்க் : Meta has decided to lay off 11,000 people due to loss of revenue : வருவாய் இழப்பு காரணமாக 11,000 பேரை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனம் மெட்டா. அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (CEO Mark Zuckerberg) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்று பரவத் தொடங்கிய போது, உலகமே இணையத்தை நோக்கி வேசுமாக நகர்ந்தது. அத்துடன் இணையவழி வர்த்தகத்தின் எழுச்சி மிகப் பெரிய வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகும் இது தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே, மெட்டாவின் முதலீடுகளைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க நான் முடிவு செய்தேன்.

ஆனால், அது நான் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. இணைய வழி வர்த்தகத்தின் (Online business) போக்கு கரோனா பரவலுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியது மட்டுமின்றி , பெரும் பொருளாதார சரிவு , போட்டித்தன்மை அதிகரிப்பு, விளம்பரங்கள் சரிவு ஆகியவற்றால் மெட்டாவின் வருவாய் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக மெட்டாவின் பணியாளர்கள் எண்ணிக்கையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளேன்.

இந்த முடிவானது விசாவில் அமெரிக்கா வந்து பணியாற்றுவோருக்கு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன். அந்தப் பணியாளர்களுக்கும். அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவ மெட்டாவில் சிறந்த குடியேற்ற நிபுணர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு 16 வாரங்கள் அடிப்படை ஊதியம் (16 weeks basic pay) வழங்கப்படும். ப‌ணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 6 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு தொடரும் போன்ற அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.