T20 World Cup semi-final : டி20 உலகக் கோப்பை அரை இறுதி : இங்கிலாந்தை வீழ்த்த இந்தியா முனைப்பு

அடிலெய்ட்: T20 World Cup semi-final : உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2 ஆவது அணியாக இணைவதற்கான முனைப்புடன் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்பதே இந்திய ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய அணி தகுதிச் சுற்றில் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து நல்லதொரு ஃபார்மில் இருக்கிறது. இங்கிலாந்து போராட்டத்துடன் இந்த இடத்துக்கு வந்துள்ளது. நியூஸிலாந்தைப் போல, இந்திய அணியும் ஐசிசி போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் சற்று தடுமாற்றம் காட்டுகிறது (The Indian team has also been struggling in the final phase of the ICC tournaments) . 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி, 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதி, 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதி, 2019 ஒரு நாள் உலகக் கோப்பை அரையிறுதி ஆகியவற்றில் இந்தியா தோல்வி அடைந்தது.

இவை அனைத்திலும் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு இருந்தாலும், கேப்டனாக இப்போட்டியே அவரது முழு திறமைக்குமான சோதனைக் களமாக உள்ளது. அத்துடன் பேட்டிங்கிலும் அவர் ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். விராட் கோலி இந்த ஆட்டத்திலும் நிலையாக ஆடுவார் எனவும் நம்ப்பபடுகிறது (Virat Kohli is expected to play consistently in this match as well). சூர்யகுமார் யாதவ் இதிலும் சுழற்றி, அடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த ஆட்டத்திற்காக‌, பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்தையும் , பௌலிங்கில் அக்ஸர் படேலுக்குப் பதிலாக யுஜவேந்திர சஹலையும் அணி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த அத்தகைய முக்கியமான கட்டத்தில் அது போன்ற மாற்றத்தை அணி நிர்வாகம் செய்யுமா என்பது சந்தேகம்தான். பௌலிங்கில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி (Bhuvneshwar Kumar, Arshdeep Singh, Mohammed Shami) உள்ளிட்டோர் விக்கெட் எடுப்பார்கள் என்று நம்புவோம்.