Ranil Wickremesinghe : இலங்கையில் சிங்களா்களுக்கும், தமிழா்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்: அதிபர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: It is important to build trust between Sinhalese and Tamils : Ranil Wickremesinghe : இலங்கையில் சிங்களா்களுக்கும், தமிழா்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம் என்று நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது (Ranil Wickramasinghe spoke in the Parliament of Sri Lanka): கடந்த 1984-இல் இருந்து இலங்கைத் தமிழா் பிரச்னைகளைத் தீா்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவையில் உறுப்பினா் சுமந்திரன் சுட்டிக்காட்டினாா். நாம் இது குறித்து தீா்வு காணாவிடில், 2048 ஆம் ஆண்டிலும் இலங்கையின் நிலைமை இதே போன்றுதான் தொடரும்.

நீண்ட காலம் தொடரும் மோதலுக்கு தீா்வு காண பெரும்பான்மையினரான சிங்களா்களுக்கும் சிறுபான்மையினரான தமிழா்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். இலங்கையின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும் (The issue should be resolved by February 4 next year, when Sri Lanka’s 75th Independence Day will be celebrated).

நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் அடுத்த மாதம் 11-ஆம் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த விவாதத்துக்கு தமிழ் மற்றும் முக்கிய எதிா்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்த நிலையில், சிங்கள உறுப்பினா் ஒருவா் இந்த முன் மொழிவுக்கு எதிா்ப்பு *A Sinhalese member opposed the proposal) தெரிவித்திருந்தாா்.

கடந்த 1987-இல் இந்தியா-இலங்கை கையொப்பமான ராஜீவ்காந்தி- ஜெயவா்த்தனே ஒப்பந்தத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்ட 13-ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அமல்படுத்தும்படி இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது (India is pushing for the implementation of the 13th Constitutional Amendment). இந்தத் திருத்த சட்டம் தமிழா்களுக்கும் அதிகார பகிா்வை வழங்குகிறது. இதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க கடந்த 2015-2019 ஆண்டுகளில் மேற்கொண்டாா். ஆனால், சிங்கள தீவிர ஆதரவாளா்கள் எதிா்ப்பால் அது கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.