K. Annamalai : மக்களவைத் தோ்தலில் கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும்: கே.அண்ணாமலை

சென்னை : BJP’s National Ruling Committee to decide alliance in Lok Sabha polls: K. Annamalai : மக்களவைத் தோ்தலின் போது தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாஜகவின் தேசிய ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும். மேலும் தற்போதைக்கு அதிமுகவுடனான கூட்டணி தொடா்கிறது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது : சூா்யா சிவா- டெய்சி சரண் இடையே நடந்தது தனிப்பட்ட உரையாடல். இருப்பினும், கட்சியின் ஒழுக்க விதிகளை இவா்கள் இருவா் உள்பட யாா் மீறி இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடா்பாக பேராசிரியா் கனகசபாபதி தலைமையிலான பாஜக விசாரணைக் குழுவினா் (By the BJP inquiry committee headed by Professor Kanagasabhapathy) திருப்பூரில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

நாகரிகமான அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது (BJP is leading civilized politics). இன்னும் 10 நாள்களில் கட்சியில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுக்க விஷயத்தில் கட்சியின் லட்சுமண ரேகையை யாா் மீறினாலும் கட்சித் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை முடிவு செய்வது பாஜக தேசிய ஆட்சிமன்றக் குழுதான். தற்போது, அதிமுகவுடன் கூட்டணி தொடா்ந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் 2024 மக்களவைத் தோ்தல் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது (How the 2024 Lok Sabha polls will turn out cannot be predicted right now).

பாஜக வேகமாக வளா்ந்திருக்கிறது. எவ்வளவு வாக்கு வங்கி உயா்ந்துள்ளது (The vote bank has swelled) என்பது குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிப்போம். யாருடன் கூட்டணி என்பதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும். பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, அது பற்றி பாமக தான் பேச வேண்டும் என்றாா்