Chennai Beach – Tambaram train canceled : பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை‍ – தாம்பரம் வரையிலான ரயில் 2 நாள்களுக்கு ரத்து

சென்னை: Chennai Beach – Tambaram train canceled for 2 days : சென்னை கடற்கரை – தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் (நவ.24 மற்றும் 25) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு (Press release issued by Southern Railway): சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு (ரயில் எண்.40147) இரவு 11.40 மணிக்கு செல்லும் மின்சார ரயில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.24, 25)முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதே வழித் தடத்தில் இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் (ரயில் எண்.40149), மறு வழித் தடத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (From Tambaram to the beach) இரவு 11.20 மணிக்கு செல்லும் (ரயில் எண்.40148) மின்சார ரயில், இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் (ரயில் எண்.40150) மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை (Suburban train service between Chennai Beach – Tambaram) புதன்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது, இதனால் பல மின் அலகுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் சிரமப்பட்டனர். தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டப் பராமரிப்புப் பணியாளர்கள் துரித கதியில் சென்று பழுதை போக்கி சேவைகளை மீட்டெடுத்தனர்.

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை EMUவில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் புறநகர் ரயில் சேவைகள் சுமார் 1.30 மணியளவில் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறால் பிளாட்பாரம் எண். 1, 2, 3 மற்றும் 4 புறநகர் ரயில்களின் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், பிற்பகல் 2.30 மணியளவில் பராமரிப்பு ஊழியர்கள் கோளாறை சரி செய்ததையடுத்து (At 2.30 pm maintenance staff fixed the problem), புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.