Actor Kamal Haasan is ill: நடிகர் கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு

சென்னை: Actor Kamal Haasan has returned home after being admitted to a private hospital due to ill health. நடிகர் கமல்ஹாசன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: Ranil Wickremesinghe : இலங்கையில் சிங்களா்களுக்கும், தமிழா்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்: அதிபர் ரணில் விக்ரமசிங்கே

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க: K. Annamalai : மக்களவைத் தோ்தலில் கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும்: கே.அண்ணாமலை

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் சென்னைக்கும் மீண்டும் திரும்பிய நிலையில், அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Chennai Beach – Tambaram train canceled : பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை‍ – தாம்பரம் வரையிலான ரயில் 2 நாள்களுக்கு ரத்து

இதனையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல் ஹாசன் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும், சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Actor Kamal Haasan has returned home after being admitted to a private hospital due to ill health.