Special buses for Deepatri festival: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை: 2,700 special buses run on the occasion of Thiruvannamalai Deepatri festival. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 6:00 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபம் அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2268 அடி உயரமான மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிரந்து சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவதற்க இங்கு குவிவார்கள். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்படும் இடங்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதிக்குள் foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும். பக்தர்களின் வருகையை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது காண்போரை மிகவும் கவர்ந்து வருகிறது.

The Transport Department has decided to operate 2,700 special buses from various parts of Tamil Nadu.