Income Tax Raid: தமிழகத்தில் தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை: The Income Tax Department’s investigation continues in Tamil Nadu. தமிழகத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரேஷன் கடைகளில் உபயோகிக்கப்படும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா ட்ரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி & கோ ஆகிய நிறுவனங்களிலும், அண்ணா நகரில் உள்ள இண்டிகிரேடட் அலுவலகத்திற்கு தொடர்புடைய பத்ரி என்பவரின் வீட்டிலும், சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: Actor Kamal Haasan is ill: நடிகர் கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு

இந்த தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறைக்கு வந்த தகவலையடுத்து, இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் நேற்று 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

For the second day now, the Income Tax Department officials have been raiding private companies supplying food items including pulses and palm oil under the Public Distribution Scheme across Tamil Nadu.