Don’t refuse Rs 10 and Rs 20 coins : அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுத்தால் துறை சார்ந்த‌ ஒழுங்கு நடவடிக்கை

சென்னை: Departmental disciplinary action if conductors refuse to buy Rs 10 and Rs 20 coins in government buses : அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரட்சி (Corporation including Chennai, Madurai, Trichy) உள்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. புகார்களின் எதிரொலியாக போக்குவரத்து கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி பேருந்துகளில் பொதுமக்கள் வழங்கும் ரூ.10, ரூ.20 நாணயங்களை வழங்கும்போது நடத்துநர்கள் அதனை மறுக்கக்கூடாது (Conductors should not refuse Rs.10 and Rs.20 coins) என அறிவிக்கப்பட்டுள்ளது. நாணயங்களை வாங்க மறுத்தால், துறை சார்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும் (There are 14 types of 10 rupee coins approved by the Government of India). அவற்றை செல்லாது என கூறூவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பதோ சட்டப்படி குற்றம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மட்டுமின்றி 10 ரூபாய் நாணயங்களை கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பல இடங்களில் வாங்க மறுத்து (Refused to buy Rs 10 coins in many places including Karnataka) வருவதாக அந்தந்த மாநில அரசுகளின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே அனைவரும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கான விழிப்புணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயல வேண்டும்.