Indian Origin Girl Car Accident: தென்ஆப்பிரிக்காவில் கார் ரேசிங் விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளி சிறுமி

டர்பன்: தென்ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை (Indian Origin Girl Car Accident) சேர்ந்தவர் வெர்னான் கோவிந்தர். இவரது மகள் கிறிஸ்டன் கோவிந்தர் 15, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிகளுக்கான கார் ரேசிங் விளையாட்டில் கிறிஸ்டன் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது தலைமுடி காரில் சிக்கி கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் சேர்த்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் உடன் இருக்கும்போது இத்துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

அங்கு பார்வையாளர்கள் வரிசையில் இருந்த துணை மருத்துவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சை அளித்தனர். சிறுமி நன்றாக உடல்நலம் சரியாகி மருத்துவமனையில் இருந்து வெளியேறி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் போதுமானது வெர்னான் கூறியுள்ளார்.