Haldwani Case: ஹல்த்வானியில் இருந்து 4,000 குடும்பங்களை வெளியேற்றக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: உத்தரகண்ட்டின் ஹல்த்வானி பகுதியில் சுமார் 4,000 (Haldwani Case) குடும்பங்களை வெளியேற வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் மூன்றாவது மாநகரமாக ஹல்த்வானி உள்ளது. அங்கு ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்திருப்பதாக நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20ம் தேதி உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதாவது ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும். நிலத்தை ரயில்வே வசம் ஒப்படைக்கவும் உயர்நீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவால் மக்கள் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வந்தது. ஒரே இரவில் 50000 பேரை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த முடியாது. எனவே உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக இது பற்றி ஆராய்ந்து மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.