Monday the worst day: திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாள்’: கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Guinness World Records : வாரத்தின் மிக மோசமான நாளாக திங்கட்கிழமை அறிவிக்கிறோம் என்று கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ பக்கம் அறிவித்துள்ளது.

Monday the worst day : நீங்களும் ஒன்பது முதல் ஐந்து வரையிலான அலுவலகப் பணியாளராக இருந்தால், திங்கட்கிழமை உங்களுக்கு எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் விளக்க வேண்டியதில்லை. வார இறுதியில் ஜாலியாக இருந்துவிட்டு திங்கட்கிழமை வழக்கம் போல் அலுவலக வேலைகளில் ஈடுபடுவது பலருக்கு கனவாகவே உள்ளது. எனவே பெரும்பாலான ஊழியர்கள் திங்கட்கிழமைகளை வெறுக்கிறார்கள். திங்கட்கிழமை என்றாலேயே அது போதும் என்று அழுபவர்களும் உண்டு.

இதன் காரணமாக திங்கட்கிழமை கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் (Guinness Book of World Records) இடம்பிடித்துள்ளது. எனவே, கின்னஸ் உலக சாதனையில் திங்கள்கிழமை மிக மோசமான நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மிக மோசமான நாளாக கின்னஸ் உலக சாதனைகள் அறிவித்ததையடுத்து, நெட்டிசன்களும் இதை ஆதரித்து, திங்கள்கிழமை தங்களுக்கு ஏன் கடினமானது என்பதை விளக்கினர்.

திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக அறிவிக்கிறோம் என்று கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனை ட்வீட் பரவலான வரவேற்பைப் பெற்றது மற்றும் 4.28 லட்சம் லைக்குகள் மற்றும் 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்களைப் (4.28 lakh likes and over 79 thousand retweets) பெற்றது.

இதனாலேயே திங்கட்கிழமை லீவு போடுகிறேன் என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். இன்னொருவர் புதன்கிழமையை என்ன‌வென்று கூறுவீர்கள் என்று கேட்டால் அது பவித்தரமான நாள் என்று கூறியுள்ளார். இது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம் என்றும் பதிவிட்டுள்ளார். திங்கட்கிழமையை தடை செய்வோம் (Let’s ban Monday). அப்போது ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு நேரடியாக‌ செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என்று மற்றொருவர் விசித்தரமான தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இதன்மூலம், கின்னஸ் சாதனைக்கான இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பலரும் பல்வேறு வகையில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.