Indonesia Earthquake: இந்தோனேசியா ஜாவா தீவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

ஜகார்த்தா: Earthquake in Cianjur kills 162 and injures hundreds. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர் அதிர்வுகளுக்கு மத்தியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம், தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து தென்கிழக்கே 75 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கு அருகில் இருந்தது. இப்பகுதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இந்த அதிர்வுகள் பல கட்டிடங்களை அழித்ததோடு மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது. இஸ்லாமிய உறைவிடப் பள்ளி, மருத்துவமனை மற்றும் பிற பொது வசதிகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தன.

சியாஞ்சூரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஒற்றை மற்றும் இரண்டு மாடி கட்டிடங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சிறிய வீடுகளில் வசிக்கின்றனர் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் பொதுப் பள்ளி மாணவர்கள்.
வீடுகள் கடுமையாக சேதமடைந்ததால் 13,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.