Maintenance work : 2 trains canceled : பராமரிப்புப் பணி காரணமாக‌ திருப்பதி – புதுச்சேரி, மேல் மருவத்தூர் – விழுப்புரம் ரயில்கள் பகுதி வாரியாக ரத்து

சென்னை: Tirupati – Puducherry, Mel Maruvathur – Villupuram trains canceled region wise due to maintenance work : விழுப்புரத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக‌ திருப்பதி – புதுச்சேரி ரயில், மேல் மருவத்தூர் – விழுப்புரம் ரயில் ஆகியவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு (Press release issued by Southern Railway): விழுப்புரத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் திருப்பதி – புதுச்சேரி ரயில் (16111) மற்றும் மேல் மருவத்தூர் – விழுப்புரம் (06725) செல்லும் ரயில் பகுதி வாரியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேல் மருவத்தூர் – விழுப்புரம் (06725) செல்லும் ரயில், நவம்பர் 28 – ஆம் தேதி வரையும், டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரம்- மேல்மருவத்தூர் (06726) செல்லும் ரயில் நவம்பர் 21 முதல் நவம்பர் 28 வரையும், டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் விழுப்புரம் – விக்கிரவாண்டி இடையே பகுதி வாரியாக ரத்து (Area wise cancellation between Villupuram – Vikravandi) செய்யப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக‌ திருப்பதி – புதுச்சேரி ரயில், விழுப்புரம் -புதுச்சேரி இடையே (Between Villupuram and Puducherry) நவம்பர் 21 முதல் நவம்பர் 28 – ஆம் தேதி வரையும், டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் பரமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அதில் கேட்டுக் கொள்ள‌ப்பட்டுள்ளது.