O. Panneer Selvam: அரசு கேபிள் டி.வி சேவைகள் திட்டமிட்டு முடக்கம்: ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: suspension of government cable TV services: O. Panneer Selvam : அரசு கேபிள் டி.வி சேவைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாகக் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகள் சரி வர இல்லை என்றும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன (There were also complaints that the number of subscribers was declining). இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாள்களாக கேபிள் டி.வி. சேனல்களைப் பார்க்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் (Cable TV People are forced to not watch the channels), கேபிள் டிவி ஆபரேட்ர்களுக்கே பிரச்னை என்ன‌வென்று தெரியாத சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கைப்பேசிகளை அணைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கான கட்டணத்தை ஓராண்டாக‌ அரசுகேபிள் டி.வி. நிறுவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனம் மென் பொருள் வழங்கும் சேவையை நிறுத்தியுள்ளது (The software delivery service has been discontinued) என்றும் தகவல்கள் வருகின்றன. அதாவது, அரசு கேபிள் டி.வி. சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பதும், தனியார் நிறுவனம் அல்ல என்பதும் தெளிவாகிறது.

இதில் எது உண்மை என்பதை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனமே முடக்கப்பட்டு விடுமோ, தனியார் டிடிஎச் சேவைக்கு ஆத‌ரவாக அரசு செயல்படுகிறதோ (Does the government support private DTH services?) என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. எது எப்படியோ, அரசு கேபிள் நிறுவனத்தின் சேவைகளை முடக்கியுள்ள திமுக அரசின் செயல், கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.