Bharat Gaurav Train : தமிழகம் வழியாக வாரணாசி ஹைதராபாத் பாரத் கவுரவ் ரயில் இயக்கம்

சென்னை : Varanasi Hyderabad Bharat Gaurav Train Operation via Tamil Nadu : தமிழகம் வழியாக வாரணாசி ஹைதராபாத் பாரத் கவுரவ் ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு (Press release issued by Southern Railway): சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் பாரத் கவுரவ் ரயில் இயக்கப்படுகிறது. வாராணசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் (ரயில் எண்: 06906) செல்லும் பாரத் கவுரவ் ரயிலின் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாராணசியில் இருந்து வியாழக்கிழமை (நவ. 24) புறப்பட்டு விஜயவாடா வழியாக சென்னை எழும்பூருக்கு (Chennai to Egmore via Vijayawada) சனிக்கிழமை (நவ. 26) எழும்பூருக்கு வந்தடைகிறது. அதேபோல், ஞாயிறுக்கிழமை (நவ. 27) விழுப்புரம், திருச்சி, ராமேஸ்வரம் வழியாக பயணிக்கும் பாரத் ரயில் கவுரவ் ரயில் திங்கள்கிழமை மதுரை, திண்டுகல், சேலத்தை சென்றடைகிறது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (நவ.29) ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை (Jollarpet, Katpadi, Chennai), பெரம்பூர் வழியாக ஹைதராபாத் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய ரயில்வே பாரத் கவுரவ் ரயில்களை அறிமுகப்படுத்தியது.

அவை தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் மற்றும் தீம் அடிப்படையிலான சுற்றுகளில் இயக்கப்படும். ஆபரேட்டர்களுக்கு அதன் ரேக்குகள் மற்றும் உள்கட்டமைப்பின் “பயன்பாட்டு உரிமையை” வழங்கும் இந்தக் கொள்கையின் மூலம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் ஒரு பகுதியை ரயில்வே தாராளமயமாக்கி எளிமைப்படுத்தியுள்ளது.