Increase in darshan time at Sabarimala: சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

சபரிமலை: Increase in darshan time at Sabarimala. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் கடந்த 17ம் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

மேலும் பரிமலையில் பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் அரிசி, சர்க்கரையை கவுண்டரில் செலுத்தி வெள்ளைச்சோறு மற்றும் பாயாசம் இலவமாக பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் அரிசி மற்றும் பொருட்களை ஆங்காங்கு விட்டு செல்கின்றனர். பின் இதை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி குப்பை குடோனுக்கு கொண்டு செல்கின்றனர். இதை பக்தர்கள் தவிர்க்க அரிசிக்காக வைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்தலாம். அல்லது அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை 18-ம் படியின் வலது பக்கம் அரவணை கவுண்டருடன் சேர்ந்திருக்கும் சர்க்கரை பாயாச கவுண்டரில் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது அதற்கு ஈடான சாதம் அல்லது பாயாசம் பெற்றுக் கொள்ளலாம். ரூ.25 கட்டணம் செலுத்தியும் இதை பெறலாம்.

இதற்காக தனி அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் ஏழு தேவசம் ஊழியர்கள், 52 தற்காலிக பணியாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.