China Space Station: சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டும் சீனா

china-space-station
சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டும் சீனா

China Space Station: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஜ.எஸ்.எஸ்.) போட்டியாக சீனா சியாங்காங் விண்வெளி நிலையத்தை (சி.எஸ்.எஸ்) உருவாக்கி வருகிறது. இதற்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த விண்வெளி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகில் தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்த பெருமை சீனாவுக்கு கிடைக்கும். சமீபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் அடங்கிய விண்வெளி வீரர்கள்குழு தியாங்காங் விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் 6 மாதம் அங்கு தங்கி இருந்து முக்கிய பாகங்களை பொருத்திவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் பத்திரமா கபூமிக்கு திரும்பினார்கள்.

விண்வெளி நிலையத்தில் இத்தனை காலங்கள் வீரர்கள் தங்கி இருந்தது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது மேலும் 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினரை சீனா அனுப்ப முடிவு செய்தது.

இந்த குழுவில் காய்ஜூஷே, சென்டாங், லியூயாங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் இன்று காலை விண்வெளிக்கு சென்றுள்ளனர். சென்ஷோ -14 என்ற விண்கலம் மூலம் இவர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கான்சு மாகாணத்தில் உள்ள ஜியூகுவான் ஏவுதளத்தில் இருந்து இன்று, மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. அவர்களை சுமந்து சென்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.

இந்த விண்கலம் தியாங்காங் விண்வெளி நிலையத்தை அடைந்ததும் இந்த விண்கலம் அத்துடன் இணைக்கப்படும். அதில் இந்த குழுவினர் இறங்கி விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள். சீனாவில் உள்ள சி.எம்.எஸ் ஏ ஆய்வு மையக்குழுவினர் வழிகாட்டுதலுடன் 6 மாதங்களில் விண்வெளி நிலைய பணிகளை அவர்கள் நிறைவு செய்வார்கள் என சீனா ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் லீன் ஜிகி யாங் தெரிவித்து உள்ளார். இன்னும் சில ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வுபெற உள்ளது. அதன் பிறகு சீனாவின் இந்த விண்வெளி நிலையம் தான் உலகில் செயல்படக் கூடிய ஒரே விண்வெளி மையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

China Launches 3 Astronauts To Complete New Space Station

இதையும் படிங்க: மஞ்சப்பைகளை பயன்படுத்த மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதில் விளம்பரம் செய்ய ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்று எட்டு நான்கு ஐந்து நான்கு ஒன்பது என்ற நம்பரை தொடர்புக்கொள்ளலாம்.