Taliban Ban Male Doctors: ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதித்த தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு (Taliban Ban Male Doctors) ஆகஸ்ட் மாதம் மக்களாட்சியை தலிபான்கள் கைப்பற்றினர். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க படைகள் திரும்ப சென்றதால் எளிதாக தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

அதன் பின்னர் தலிபான்கள் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணையின்றி வெளியில் செல்லக்கூடாது. படிக்கும் இடத்தில் பெண்கள் ஒரே வகுப்பறையில் இருக்ககூடாது, வேலைக்கு செல்வதற்கு தடை, உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை என அடுக்கடுக்காக செய்து வந்தனர். இதற்கு உலக பெண்கள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்தது. ஆனாலும் இதனை பொருட்படுத்தாமல் தலிபான்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.