சென்னை: பொங்கல் பண்டிகை வருகின்ற (Pongal Special Bus) ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக இன்று (ஜனவரி) 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் 18ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



