Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12.01.2023)

தருமபுரி: சுபகிருது ஆண்டு மார்கழி மாதம் 28ம் தேதி (Today Rasi Palan) வியாழக்கிழமை. சந்திர பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். பிற்பகல் 2.10 மணி வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று பிற்பகல் 12.51 மணி வரை பூரம். பின்னர் உத்திரம். அவிட்டம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: சொல்லிலும் செயலிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகளில் தீர்க்கமான ஆலோசனை அவசியம். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

ரிஷபம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும்.

மிதுனம்: மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சுபச்செலவாகவே இருக்கும்.

கடகம்: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. பயணங்களின் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்டா நாட்களாக எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். சிலருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் தேடிவரும்.

கன்னி: அதிகரிக்கும் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். உறவுகள் வழியில் சுபச்செய்தி வரும்.

துலாம்: இன்று நீங்கள் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பு நிறைந்திருக்கும்.

தனுசு: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையான நிறைவேற்றச் சிறு அலைச்சலை மேற்கொள்ள வேண்டிவரும்.

மகரம்: முக்கிய முடிவு எடுப்பதை இன்று தள்ளிப்போடுவது நல்லது. வழக்கமான பணிகளில் மிகுந்த கவனம் தேவை. வீண் விவாதத்தைத் தவிருங்கும். இறைவழிபாடு முக்கியம்.

கும்பம்: எதிர்பார்த்த காரியம் இழுபறிக்கும் பின்னர் சாதகமாகும். பிற்பகலுக்கு மேல் குடும்பத்தினரால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.

மீனம்: அனுகூலமான நாள். எதிர்பார்த்த நற்செய்தி இன்று கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவாக இருப்பார்கள்.