7 Lakh Tourists Visited Sri Lanka: இலங்கைக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 7.2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

இலங்கை: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் (7 Lakh Tourists Visited Sri Lanka) ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் மக்கள் பசி, பட்டினியால் வாடினர். அது மட்டுமின்றி இலங்கையின் மிக முக்கிய தொழிலான சுற்றுலா தொழிலும் முடங்கியிருந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு வழியின்றி போனது.

இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று குறைந்த காரணத்தினால் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மட்டும் இலங்கைக்கு 7.2 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.