Declare Ram Bridge National Symbol: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக (Declare Ram Bridge National Symbol) அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது சுப்பிரமணிய சுவாமி சார்பில் கூறும்போது, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பதற்கு ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சார்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது. மத்திய அரசின் இந்த பதிலை ஏற்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரப்படும் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.