என்னது சாப்பிட ஹிந்தி தெரிந்திருக்கவேண்டுமா !

சோமாடோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, உணவு விநியோக தளமான சோமாடோ சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

உணவு விநியோக நிறுவனமான சோமாடோவின் வாடிக்கையாளர் இந்தி தெரியாததால் “பொய்யர்” என்று அழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

விகாஷ் என்ற நபர் உணவை ஆர்டர் செய்து விட்டு வராத காரணத்தினால் சோமாடோ சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது அந்த நிர்வாகி ஹிந்தி மொழியில் பேசியுள்ளார்.ஹிந்தி தெரியாது என்ற போது அந்நிறுவனத்தில் பணியாற்றும் உணவு விநியோக நிர்வாகி “தேசிய மொழி” என்பதால் ஹிந்தியைக் கற்கும்படி கூறியுள்ளார்.

இந்த செய்தியை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.நிர்வாகிகளுடன் பேசிய உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : நடிகை ஸ்ரீவித்யா நினைவு தினம் இன்று !