நடிகை ஸ்ரீவித்யா நினைவு தினம் இன்று !

நடிகை ஸ்ரீவித்யா நினைவு தினம் இன்று.தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை. 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அழகு மற்றும் திறமை ஒன்று சேர்ந்த நடிகை.ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இசை ஞானத்துடன் இருந்தார். அதற்குக் காரணம் அவருடைய தாய் எம்.எல். வசந்த குமாரியும் தாத்தா அய்யாசுவாமியும். இருவருமே இசைக் கலைஞர்கள்.

ஸ்ரீவித்யா .800 படங்களிலும் 25 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.அக்டோபர் 19, 2006ல் அவர் காலமானார்.அவருக்கு ஸ்பைன் கேன்சர் இருந்துள்ளது.இதன் காரணமாக அவர் இறந்துள்ளார்.அவர் மறைந்து பல காலங்கள் ஆனாலும் அவர் நடிப்பின் மூலமாக நம்முள் இருந்து வருகிறார்.

அம்மா வேடங்களில் அவர் நடித்த காதலுக்கு மரியாதை,ஆனந்தம்,தளபதி போன்ற படங்களில் இன்று வரை நம் மனதில் இருப்பவை.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !