150 சிசிக்கு மேல் உள்ள பைக்குகள் காப்பீட்டு உரிமை கோர முடியாது !

ஹெச்டிஎஃப்சி எர்கோவிடம் இருந்து ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம், மோட்டார் விபத்து உரிமைகோரலை மறுத்து வந்த கடிதம்.

150 சிசி எஞ்சினுக்கு மேல் மோட்டார் பைக்கை ஓற்றி சென்று உயிரிழந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, காப்பீடு செய்யப்பட்டவர் 346 சிசி பைக்கை ஓட்டியுள்ளார்.மேலும் விபத்து காரணமாக காப்பீட்டாளர் தலையில் காயம் காரணமாக இறந்துள்ளார்.ஓட்டினார் மற்றும் பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, 150 சிசிக்கு மேல் மோட்டார் சைக்கிள் அல்லது மோட்டார் ஸ்கூட்டர் ஓட்டும் போது ஏற்படும் உடல் காயத்திற்கு பொது விதிவிலக்கு பிரிவு 8 ன் கீழ் கட்டணம் செலுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !