கரோனா காலத்தில் அதிகரிக்கும் சமூக ஊடகங்கள் பயன்பாடு

பொதுமுடக்கம் சமயத்தில் அதிகரித்துள்ள சமூக ஊடகங்கள் பயன்பாடு, பலரைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

டிஜிட்டல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளும், பெரியவர்களும்தான். எனவே, சமூக ஊடக பயனர்களைச் சரிபார்க்க அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்களுக்கு உணர்ச்சி சமநிலை கற்பிக்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொலிகளைத் தணிக்கைசெய்ய சிறப்பு வாரியத்தை அமைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.