காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமத்தில் வசிக்கும் கணேசன் என்பவரின் குடும்பத்தினர் தொடர்ந்து எரிசாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். வாலாஜாபாத் காவல் துறையினர் கணேசனின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது கேன்களிலும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 105 லிட்டர் எரி சாராயத்தை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து கணேசன் மற்றும் அவரது மகள் பவித்ரா, உறவினர் ரமேஷ் ஆகிய மூவரையும் வாலாஜாபாத் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 105 லிட்டர் எரி சாராயத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சாராய விற்பனையில் தொடர்புடைய பலரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.



