சிறுதானியம் மற்றும் அதன் பயன்கள் !

அரிசியின் அளவை விட சிறியதாக இருக்கும் சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும்.சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக கருதப்படுகிறது.சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும், குறைவான நீர் வசதியிலும், மற்றும் சாதாரண மண் வளத்திலும் நன்கு செழித்து வளரும். சிறுதானியங்களில் பெரும்பாலானவை பயிரிடப்பட்டு மிக குறுகிய காலத்தில் அதாவது 65 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.

சிறுதானிய வகைகளுள் சில தினை,குதிரைவாலி,வரகு மற்றும் சாமை .சிறுதானியங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைக்கப் பட்டு உடல் பருமன் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது தடுக்கிறது.சிறுதானியங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தசோகையைக் குணப்படுத்தும்.

சிறுதானியங்களில் இருக்கும் நார்ச்சத்து புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்கள் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.