இந்திய மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்!

ஆயுர்வேத முதுநிலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளிப்பதற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தால் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் நாடு முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது.

போராட்டம் குறித்து சி என் ராஜா இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் செய்தியாளர்களிடம் கூறியது “60-க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் 800 இடங்களில் 8-ஆம் தேதி போராட்டம் நடத்தினோம். இன்று ஒரு நாள் புற நோயாளிகள் சேவையை நாடு முழுவதும் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆயுர்வேதா சித்தா மருத்துவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவரவர் அவரவர் மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.