பொலிவான சருமம் பெற எளிமையான அழகு குறிப்புகள்!

மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை சேர்க்கும். மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள்.

ஒரு ஸ்பூன் காபி பவுடர் மற்றும் அத்துடன் வெள்ளை சக்கரை கலந்து பேஸ்ட் பண்ணிக்கொள்ளவும்.இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.

முட்டை வெள்ளைக்கருவுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்யயும். கால் மணி நேரம் கழித்து கழுவினால் உங்கள் முகம் ஜொலிக்கும்!

வேகவைத்த உருளைக்கிழங்கு, மசித்த ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறு, கொஞ்சம் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உடலெங்கும் பூசி, குளித்து வந்தால் மென்மையான, பொலிவான சருமத்தை பெறலாம்.