மீசை கவிஞன் பாரதி பிறந்தநாள்: தமிழில் வாழ்த்திய அமித் ஷா!

நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன் தான் நம் மீசை கவிஞன் பாரதி. தமிழ், தமிழர் நலன், மாதர் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க பேசியவன் தான் நம் தேசிய கவிஞன் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.தமிழ் மொழியின் நவீன கவிதையின் முன்னோடியான மகாகவி பாரதியார் இன்று தனது 138ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்தவர்களில் ஒருவரான மகாகவிக்கு பாஜகவின் மூத்தத் தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.