வாக்காளர் அடையாள அட்டை இல்லையா..கவலை வேண்டாம் !

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியம். அட்டை இன்னும் அப்ளை பண்ணாதவர்கள் எந்த வித இடர்ப்பாடும் இன்றி வாக்களிக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், வாக்களிப்பதை எத்தனை எளிதாக செயல்படுத்த முடியுமோ அந்தளவுக்கு வேலைகளில் இறங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

ஓட்டு போடா வாக்காளர் பெயர் பட்டியலில் உங்களது பெயர் இருக்க வேண்டியது அவசியம். வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து சான்றுக்காக காண்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல் 11ஆவணங்களை உபயோகப்படுத்தலாம் அவை புகைப்பட அடையாள அட்டை,ஆதார் அட்டை,ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,ஓட்டுநர் உரிமம்.

நிரந்தர கணக்கு எண் அட்டை,தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ், தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,இந்திய கடவுச்சீட்டு,புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள்,நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை இவற்றை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.