இயக்குநர் ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதி !

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, பூலோகம் ஆகிய படங்களை இயக்கியவர்.தற்போது அவர் லாபம் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.