வெளியானது அமமுக 3வது வேட்பாளர் பட்டியல் !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்,65 அமமுக வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியான நிலையில், இன்று 130 வேட்பாளர்கள் கொண்ட 3ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆறுமுகமும், அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் சி.பி.ராமஜெயம் போட்டியிடுகின்றனர்.

மேலும் துறைமுகம் தொகுதியில் சந்தானகிருஷ்ணன், வேளச்சேரியில் சந்திரபோஸ், காட்பாடியில் ராஜா போட்டியிடுகின்றனர்.