செல்லாத பணம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 20 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இதில்,தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்தின் படைப்பான ‘செல்லாத பணம்’ நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.