நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன்- யாஷிகா ஆனந்த்

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

அதில் அதில், “நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக, கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை நொந்துக் கொள்வதா எனத் தெரியவில்லை.

ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என தெரியும். என்னை மன்னித்துவிடு. உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.