நடு வானில் சிக்கிய விக்ரம் – துருவ்..!

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் ஷூட்டிங்கிற்காக டார்ஜிலிங் சென்ற போது… நடு வானில் விமானத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் டார்ஜிலிங் செல்லாமல் மீண்டும் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் குறித்த நேரத்திற்கு படக்குழு டார்ஜிலிங் செல்லவில்லை என்றாலும், மறுநாள் படப்பிடிப்புக்காக விமானத்தில் டார்ஜிலிங் சென்றுள்ளனர்.

இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என கூறப்படுகிறது.