தமிழகத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

Budget 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, முதல்முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இதுதொடர்பாக நாளை காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால், அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த நிலையில், அதுபற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.