இன்று மதியம் 12 மணிக்கு 10ஆம் வகுப்பு முடிவுகள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று மதியம் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக, CBSE இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்தது. உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முடிவுகளை தெரிந்துக்கொள்ள CBSE -யின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbseresults.nic.in அல்லது cbse.nic.in க்குச் செல்லவும்.