மாஸ் காட்டும் கே.ஜி.எஃப். 2 டீஸர் !

2018 ஆண்டு யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.தற்போது பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் என்கிற செய்தியை அடுத்து கே.ஜி.எஃப். 2 படத்தின் டீஸர் வெளியானது.

யஷ் பிறந்தநாளையொட்டி கே.ஜி.எஃப். 2 படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர்.டீஸர் வெளியான குறைந்த நேரத்திலே அனைவராலும் லைக் செய்யப்பட்டது.சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டது.

முன்னதாக சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததும் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அவர் நல்லபடியாக குணமடைந்து வீடு திரும்பிய பிறகு கே.ஜி.எஃப். 2 படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு தான் வரும் காட்சிகளை நடித்துக் கொடுத்தார்.