லடாக்கில் உலகின் மிக உயரமான சாலை திறப்பு !

லடாக்கில் லே பகுதி பாங்காங் ஏரியுடன் இணைக்கும் 18,600 அடி உயரத்தில் உயரமான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்திய இராணுவத்தின் 58 இன்ஜினியர் ரெஜிமென்ட் அமைத்த இந்த லே (ஜிங்க்ரால் முதல் டாங்ட்சே) வரை கேலா கணவாயை கடக்கும் பாங்கோங் ஏரிக்கு 41 கிமீ பயணத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்று திறக்கப்பட்ட சாலை, பொது மக்களுக்கு 18,600 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான பயணிக்கும் சாலையாக இருக்கும்.18600 அடி உயரத்தில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட சாலையை லடாக் எம்.பி ஜம்யாங் செரிங் நாம்யால் திறக்கப்பட்டது.

இந்த சாலை உள்ளூர்வாசிகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும், முதன்மையாக லடாக் லலோக் பகுதி மக்களுக்கு. இந்த சாலை சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு சிறந்த ஒன்றாகும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் இந்த உலகின் மிக உயர்ந்த மோட்டார் சாலை பயணிக்கும் பொது அரிய மருத்துவ தாவரங்கள், பனி விளையாட்டு போன்றவற்றை கண்டு ரசிக்கலாம்.