டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது.
மேலும் தரவரிசை பட்டியலில் 34 வது இடத்தில் உள்ளது.இதில் ஐசியுவில் கோவிட் உடன் போராடிய பிறகு, அதனா வெண்கலம் வென்றார்.
மே மாதத்தின் கடைசி வாரத்தில், 39 வயதான சிங்கராஜ் அதானா கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டார் மற்றும் அவரது ஆக்ஸிஜன் 50 க்கும் கீழே இருந்துள்ளது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பாரா ஷூட்டர், மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.
சிங்ராஜ் ஒரு வாரத்திற்கும் மேலாக கோவிட் -19 ஐசியுவில் இருந்துள்ளார்.பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதனா மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 216.8 புள்ளிகளைப் பெற்று பதக்கம் வென்றார்.



