அட கடவுளே..பிரபல வெப் சீரிஸ் பார்க்க விடுமுறை அறிவித்த நிறுவனம் !

மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று.இதில் நடித்த அணைத்து கதாபாத்திரமும் அனைவரும் உலகம் முழுவதும் பிரபலமானார்கள்.அலெக்ஸ் பினா என்பவரின் கற்பனையில் உதித்த ‘மனி ஹெய்ஸ்ட்’ ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் ’லா காஸா டி பாபெல்’ என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது.

ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் 8 கொள்ளையர்களையும் அவர்களை வழிநடத்தும் ‘ப்ரொஃபஸர்’ என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதை.

தற்போது இதன் 5 ம் சீசன் செப்டம்பர் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த தொடரை காண தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது ஒரு தனியார் மென்பொருள் நிறுவனம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.இந்த அறிவிப்பினை வெர்வ் லாஜிக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.